நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Hugo [2011]

hugo_ver9

 

மார்ட்டீன் ஸ்கோசெஸி ஏதோ 3Dயில் சின்னப்புள்ள படம் எடுக்குறாராமே …. முதல்ல கேள்விப்பட்டதும் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். என்னடா இது, எப்பவும் சைக்கோ த்ரில்லர், இத்தாலியன் மாஃபியா, வன்முறைன்னு போட்டு கடையிறவரு திடீர்னு இப்படி??? வயசானதுல மனுசனுக்கு ஏதாச்சு மண்டைல நட்டு லூசாகி விட்டதோன்னு கூட டவுட்டு வந்துச்சு. “தம்பி … வயசானாலும் கைவசம் மேட்டர் இருக்கு. என்னை நம்பினோர் கைவிடப்படார். இதோப் பார்” என முகத்தில் அடித்தாற் போல பதிலளித்திருக்கிறார் ஸ்கோசெஸி.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

thumb1

பாரீஸ் ரயில்வே நிலையத்தில் ஓடும் கடிகாரங்களை திருத்தி, பராமரிக்கும் அந்த சிறுவனின் பெயர் ஹ்யுகோ கப்ரே. தந்தை இறந்தபின் அவனது மாமனார் அவனை தத்தெடுத்து வந்து தனது கடிகாரங்களை பராமரிக்கும் தொழிலை செய்ய வைக்கிறார். சிறிது காலத்தில் அவரும் இறந்துபோக அனாதைச் சிறுவர்களை பிடித்து இல்லங்களில் கொடுக்கும் ரயில்வே இன்ஸ்பெக்டரின் பார்வையில் இருந்து தப்ப, ரயில்வே நிலையத்தின் சந்து பொந்துகளிலும், அறைகளிலும் மறைந்து வாழ்கின்றான் ஹ்யுகோ.

அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் ஹ்யுகோ, தன் ஓய்வு நேரத்தை ரயில்வே நிலையத்தில் இருந்து திருடும் இயந்திரப் பொருட்களைக் கொண்டு, அவனின் தந்தை இறக்கும் முன் அவரின் கனவாக இருந்த ஆட்டோமேட்டன் எனப்படும் ரோபோ ஒன்றை திருத்துகிறான். ஒருமுறை ரயில்வே நிலையத்தில் விளையாட்டு பொம்மை திருத்தும் கடை வைத்திருக்கும் ஜோர்ஜ் என்ற கிழவனிடம் திருடும்போது மாட்டிக் கொள்ள இவனது வாழ்க்கை இன்னும் சிக்கலடைகிறது.

ஜோர்ஜ் திருடப்பட்ட பொருட்களை எடுக்கும்போது, ஹ்யுகோவின் ஆட்டோமேட்டன் பற்றிய நோட்புக்கையும் பார்த்துவிட்டு வாங்கி வைத்துக்கொள்கிறான். அதைக் கேட்டுச் செல்லும் ஹ்யுகோவிற்கு இஸபெல் எனும் ஜோர்ஜ் குடும்பத்தால் வளர்க்கப்படும் பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. இஸபெல் நோட்புக்கை ஹ்யுகோவிற்கு பெற்றுத்தர, நட்பு மலர்கிறது. பின்னர் ஹ்யுகோ, தன் வாழ்விடமான ரயில்வே சீலிங் மேலேயுள்ள அறை, சந்துகள் என்பவற்றை இஸபெல்லிற்கு காட்டுகிறான்.

thumb8


தொடர்ந்து பயணிக்கும் கதையில் அவர்களுக்கு ஜோர்ஜ் எனும் ரயில்வே நிலையத்தில் விளையாட்டுக்கடை வைத்திருக்கும் அந்தக் கிழவர், திரையுலகம் கொண்டாடும் பிரான்ஸ் நாட்டின் திரைப்பட முன்னோடி ஜோர்ஜ் மெலியஸ் எனும் மேதை என்பது தெரியவருகிறது. யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு மனமொடிந்து, திரையுலகு வெறுத்து ஒதுங்கியுள்ள ஜோர்ஜை எப்படி மீண்டும் எவ்வாறு இச்சிறுவர்கள் மீட்டார்கள் என்பது மீதிக் கதை.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

மார்ட்டின் ஸ்கோசெசி படம் என்பதால் நிறைய … நிறைய எதிர்ப்பார்ப்புக்களுடன் திரையரங்கிற்குள் நுழைந்தேன் (என் ரூமைத் தான் சொன்னேன். எனக்கு அதுதான் தியேட்டர்). ஸ்கோசெசி படம் என்னும் போது எதிர்ப்பார்ப்புக்கள் வருவது சகஜம் தான். அந்த வகையில் திரைக்கதையில் மட்டும் கொஞ்ஞ்ஞ்சம் (நோட் இட் கொஞ்ஞ்ஞ்சம் தான்) ஏமாற்றம்.

படம்
The Invention of Hugo Cabret என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் புத்தகம் Georges Méliès இன் வாழ்க்கையை இன்ஸ்பைர் செய்து எழுதப்பட்டது.

ஆனால் அந்த ஏமாற்றத்தையெல்லாம் தூக்கி வீசவைத்துவிட்டார்கள் திரைப்படக் குழுவினர். ப்ளாட்டான திரைக்கதையை கொண்ட படம் என்றாலும், அந்த இரண்டு மணி நேரங்கள் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவம் என்றுத் தான் கூறவேண்டும். நம் வீட்டில் 3D பார்க்கும் வசதி இல்லாததால் அந்த அனுபவத்தை இழந்துவிட்டேன்
(அவ்வ்வ்வ்) ஆனால் வாசித்த வரை Avatarக்கு பிறகு 3Dஐ மிகச் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றிப் பெற்ற படம் இது தான் என்கிறார்கள். அந்த ரயில்வே நிலையம், பாரீஸ் என எல்லா விடயத்தையும் pixel-by-pixel ஆகப் பார்த்து கட்டியிருக்கிறார்கள். Absolute Perfection !!!!

thumb2


இம்முறை ஆஸ்கார் விருதுகளில் Best Picture, Art Direction, Cinematography என மூன்று பிரிவுகளில் போட்டியிடுகிறது. பெஸ்ட் பிக்சர் பிரிவில் The Tree of Life, The Artist படங்களும் இருப்பதால் கட்டாயம் இப்பிரிவில் விருது கிடைக்காது. ஆனால் மற்ற இரு பிரிவுகளில் ஒன்றிலாவது விருது கிடைக்காவிட்டால் ஆச்சரியம் தான்.

சிறுபிள்ளைகளுக்கான படம் என்று சொன்னாலும், அனைத்து வயது தரப்பினரும் அனுபவிக்க வேண்டிய ஒரு படம். முக்கியமாக இரண்டாம் அரைவாசியில் வரும் ஜோர்ஜ் இன் சினிமா காட்சிகள், உலகசினிமா-ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு பாடம் கொண்டாட்டமாக அமையும். என்னைப் பொறுத்தவரை இரண்டாம் பாகமே படத்தை தூக்கி நிறுத்துகிறது.

பென் கிங்ஸ்லி அமைதியான வீதியோரக் கடைக் கிழவருக்கும், ஜோர்ஜ் மெலியஸிற்கும் இடையில் காட்டும் நடிப்பின் மாற்றம் படத்தில் வரும் மற்ற எல்லா நடிகர்களின் நடிப்பையும் ஓரங் கட்டிவிடுகிறது. ஸ்டார்-ஒவ்-த-மூவி இவர்தான். சிறுவர்களாக வரும் ஆஸா பட்டர்ஃபீல்ட், க்லோ மொரெட்ஸ் இருவரின் நடிப்பும் அருமை. ரயில்வே நிலைய இன்ஸ்பெக்டரின் காதல் கதை படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் ரசிக்கக் வைக்கிறது.

thumb4


"The Artist was made as a love letter to cinema" ன்னு சொல்லியிருந்தாங்க. படம் பார்க்காததால் எப்படின்னு தெரியல. ஆனால் Hugoவும் எனக்கு பொறுத்தவரை ஸ்கோசெசி சினிமா உலகுக்கும் தான் ரசித்த ஜோர்ஜ் மெலியஸிற்கும் அனுப்பும் ஒரு காதல் கடிதம் போலத் தான் தோன்றுகிறது. இதுவரை வந்த இவரின் படஙகளில் சினிமாவிற்கு நெருக்கமான படம் என்றும் இதைச் சொல்லலாம்.

மார்ட்டின் இப்படம் மூலம் நமக்கு பழையப் படங்கள் ஏன் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப் படுகின்றன என்று சொல்ல முயற்சிக்கிறார் என நினைக்கிறேன். கதையில் அடிக்கடி முன்னும் பின்னும் காட்டப்படும் அந்தப் பழைய ப்ளாக் அன்ட் வைட் படங்களின் அந்த Charming effect படம் முடிந்தபின்பும் மனதில் நிற்கின்றன. அதே நேரம் கனவிற்குள் கனவு சீன் ஒன்றும் படத்தில் வருகிறது (நாம இன்ஸெப்சன் பார்த்துட்டே கூலா இருந்தவங்க. நமக்கேவா??? )

இப்படம் பார்த்துக்கொண்டிக்கும் போது “வாவ் … கட்டாயம் ஆஸ்கார் கிடைக்கவேண்டிய படம் இது” எனத் தோன்றினாலும், படம் முடிந்த பின் அந்த “நெஞ்சைத் தொட்டுவிட்டது டச்” மனதில் வரவில்லை. மனதில் பாதிப்பை ஏற்படுத்தவும் இல்லை. வடிவேலு மாதிரி சொன்னா “இருக்கு ஆனா இல்லை”.  ஆனால் பார்த்தால் மனதில் ஒரு திருப்தி வருவது நிச்சயம்.


Hugo - வீ வாண்ட் மோர் மார்ட்டின் !!!

My Rating – 86/100


படத்தின் ட்ரெயிலர் -

அருமையான படம் பார்க்கச் சுண்டி இழுக்கும் ட்ரெயிலர்.

 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

முழுப்படத்தையும் ஆன்லைனில் பார்க்க இங்கே க்ளிக்கவும்

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டிஸ்கி குறும்படம் :

இன்று PirateBay தளம் பக்கம் சென்றபொழுது இந்தக் குறும்படம் பற்றிப் போட்டிருந்தாங்க. முழுக்க 3Dயில் அழகான ஒரு ஆக்சன் குறும்பட முயற்சி. வசனங்களே இல்லாமல் பின்னணி இசையின் துணையுடன் மட்டும். 15நிமிடம் ஒதுக்க முடிந்தால் பாருங்க.



பதிவு பிடித்திருந்தால் திரட்டிகளில் ஓட்டுப் போட்டுவிடுங்க …

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

11 comments:

  1. Hugo ஆஸ்கர் நாமினேஷன்ல போட்டதுல இருந்தே, அதை பார்க்கனும்னு துடிச்சுகிட்டிருக்கேன். வாய்ப்பு இன்னும் சிக்கலை! விமர்சனம் வழக்கம் போல நன்று!!

    * இந்த குறும்படம் நல்லா இருக்கு. நீங்க Fantastic Flying Books of Morris Lessmore குறும்படம் பார்த்துட்டீங்களான்னு தெரியலை. ஆஸ்கர் நாமினேஷன்ல இருக்கு. செம படம்.. 15 நிமிஷம்தான். அனிமேஷன் குறும்படங்களின் பிரியர்கள் இருந்தா போய் பாருங்க!
    http://www.youtube.com/watch?v=Adzywe9xeIU

    ReplyDelete
  2. @JZ

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி JZ.

    ஆஸ்கார் குறும்படங்கள் பற்றி ஒரு பதிவு போட யோசித்து இருக்கிறேன். சீக்கிரம் எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. படம் பண்ணிவிட்டு பார்க்க இருப்பதால் கதையை மட்டும் தவிர்த்துவிட்டு மற்றதை படித்தேன்..மிக்க நன்று..பல தகவல்களை சுவாரஸ்யமாக தங்களது பாணியில் வழங்கியிருக்கிறீர்கள்..தொடரட்டும்..வாழ்த்துக்களோடு நன்றிகள்.

    ReplyDelete
  4. ஹூகோ திரைப்படம் இந்த முறை ஆஸ்கருக்கு 11 நாமினேஷன்கள் பெற்றுள்ளது..கண்டிப்பாக கையோடு ஐந்தாறு விருதுகளை வென்று செல்லும் என்று எதிர்ப்பார்க்கிறேன்..தெ ஆர்டிஸ்ட் படமும் விருதுகளை வென்றிட வாய்ப்புகள் மிகவும் அதிகம்..நன்றி.

    ReplyDelete
  5. @Kumaran

    11 பிரிவுகளில் போட்டியிட்டாலும் எனக்கு Art Direction, Cinematography பிரிவுகளில் வெல்ல கொஞ்சம் சான்ஸ் அதிகம் போலத் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. பாஸ்,
    இந்த படமும் டவுன்லோட் பண்ணியாச்சு. ஆஸ்கார் இன்னைக்கு தெரிஞ்சிடும். முடிவு தெரிஞ்ச அப்புறம் பார்த்த இன்னும் சுவாரிசியமா இருக்கும். படத்தோட அவுட் லைன் மட்டும் இப்போதைக்கு படிச்சுட்டு போறேன்..

    ReplyDelete
  7. நீங்க Academy award panel ல இருகிறீங்களா அண்ணே! இங்க பதிவு போடா, அங்க ஆஸ்கார் கிடைக்குது!

    ReplyDelete
  8. @ஜேகே

    காகம் அமர பனம்பழம் விழுந்தாப் போல, நான் ஏதோ Art Direction, Cinematography பிரிவுகள்ல கிடைக்கும்னு சொன்னது பலித்துவிட்டது. அதுக்குப் போய் ...

    ReplyDelete
  9. இன்சப்ஷன் படத்தை பலமுறை பார்த்து சிலாகித்தவன் நான். நீங்க ஜஸ்ட் லைக் தட்னு பாத்து இருக்கீங்கன்னா..கிரேட். ஹ்யூகோ..பார்க்கணும்.

    ReplyDelete
  10. எனக்கு படம் மிகப்பிடித்திருந்தது. அதில் ஹுகோ சொல்லும் ஒரு வசனம்... நான் உலகத்தை ஒரு மெஷினாகத்தான் பார்க்கிறேன். ஒரு மெஷினை எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் எல்லா பாகமுமே எதாவது ஒரு விதத்தில் தேவையான ஒன்று தான். அது போல, உலகத்தில் இருக்கும் எல்லாருமே ஏதாவது ஒரு விஷயத்தில் தேவையானவர்கள் தான். .. எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

    ReplyDelete
  11. @bandhu

    இங்க்லிஷை விட தமிழ்ல சொல்லும்போது நல்லாயிருக்கு.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...