நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Love Actually (2003) - 18+

folder


போனவாரம் நம்ம வீட்டுக்கு வந்திருந்த ஒரு பெரிசு என்கிட்ட இப்படித் தான் புலம்பிட்டு இருந்துச்சு. “என்ன உலகம்டா இது? எங்கப் பார்த்தாலும் சண்டை, வெட்டு குத்து.  மதவெறி, இனவெறி, மனுசனுக்கு மனுசன் பொறாமைப் பட்டுக்கிறானுங்க. பக்கத்து வீட்டுக்காரன் ஒரு சைக்கிள் வாங்கினா, தான் கடனுக்காச்சு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கனும்னு நினைக்கிறான். சுத்த மோசம்பா இந்த உலகம்”. இதெல்லாம் கேட்டதும் எனக்கும் வானம் பட சிம்பு மாதிரி ”என்னா வாழ்க்கடா”னு தோணிச்சு. ஆனா இந்தப் படம் பார்த்ததும் அந்த ஐடியா சுத்தமா காணாமப் போயிட்டுது.

இந்தப் படம் இந்த வரிகளுடன் தான் தொடங்குகிறது.

நாம் அனைவரும் இந்த உலகம் கொடூரமானது, பொறாமை மிக்கது என எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உற்றுக் கவனித்துப் பார்த்தால் எம்மைச் சுற்றி எவ்வளவு அன்பும் பாசமும் பரவி இருக்கிறது என்று தெரியும். அம்மா-குழந்தை, அப்பா-மகன், காதலர்கள், சகோதரர்கள், உறவினர் என்று பெரிதாக எடுத்துக்காட்டப்படாவிட்டாலும் எம்மைச் சுற்றி அன்பு இருப்பது நிச்சயம். செப்டம்பர் 11 அமெரிக்கக் கோபுரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டபின் சென்ற தொலைபேசி அழைப்புக்கள் கோபத்தினாலும், வெறுப்பாலும் எடுக்கப்பட்டவை அல்ல. அன்பாலும் பாசத்தாலும் மேற்கொள்ளப்பட்ட அழைப்புக்கள்



இந்த அன்பு என்பது பொதுவாக …. வெயிட் … டேய் வெண்ணை … நீயே லவ் பண்ண ஃபிகரு மாட்டாம பதிவெழுதி காலத்த ஓட்டிட்டு தானே இருக்க. மூடிட்டு மேட்டருக்கு வா.

தோ … போயிட்டேன்.



thumb3ஹாலிவுட் ரொமாண்டிக் காமெடிக்களில் ஒரு டைப் உண்டு. அதாவது நாலைந்து மேற்பட்ட கதைகளை பின்னிப் பிசைந்து சாம்பாராக்கி கடைசியில் ஒரு புள்ளியில் கொண்டு வந்து முடிப்பார்கள். New York I Love You, Valentine’s Day, New Years Eve போன்ற படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட இந்த ஃபோர்முலாவையே கையாண்டு இருக்கும்.

போதாக்குறைக்கு நடிக்கும் நடிகர்களுக்கும் அவங்கவுங்க ஸ்டேடஸிற்கு ஏற்ற மாதிரி டைம் ஒதுக்கவேண்டுமே? . இந்த மாதிரி பிரச்சினைகளாலேயே அனேகமான டைரக்டர்கள், இந்த ஏகப்பட்ட கதைகளைகளையும் குறிப்பிட்ட அந்த டைம் ஃப்ரேமிற்குள் முடிக்கமுடியாமல் திணறி அவசர அவசரமாக நாறடித்துவிடுவார்கள். இந்தப் படமும் அப்படியா?



லண்டன் நகரம். கிறிஸ்மஸ் சீசன். இந்த பிரிட்டிஷ்காரனுக்கு ஒரு பழக்கம் என்னன்னா இந்த கிறிஸ்மஸ் சீசன்ல தான் மனசுல இருக்குற லவ்வை கொட்டி உண்மைய சொல்ல நினைப்பான். (அப்போ அதுவரைக்கும்?) புதுவருட டைமில் மனதுக்கு பிடித்தவர்களுடன் இருப்பதில் அவனுக்கு ஒரு சுகம் (அவனுக்கு மட்டுமில்லை … எல்லாருக்கும் தானே).

thumb4இந்தப்படமும் கிட்டத்தட்ட 8-10 லவ் ஜோடிகளின் (மெமரி கொஞ்சம் வீக். ஹி ஹி) வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் கிறிஸ்மஸ் சீசனில் ஃபாலோ பண்ணுகிறது. கூடவே நாமும்.  சுருக்கமா மெயின் கரெக்டர்களைப் பார்ப்பதானால் …

மனைவி இறந்த சோகத்தில் மூக்கை சிந்திக்கொண்டிருக்கும் டேனியல், மற்றும் ஸ்கூலில் படிக்கும் ஒரு புள்ளய ஒன் சைட்டாக லவ்விக் கொண்டு என்ன செய்வதென தெரியாமல் முழிக்கும் மகன் சாம். அண்மையில் திருமணமான தன் நெருங்கிய நண்பன் பீட்டரின் மனைவி ஜுலியட் மீது உள்ள காதலால் தவிக்கும் மார்க். தன் சகோதரனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் கேர்ள்பிரண்ட்டால் மனம் வெறுத்து தனியே ஒரு வீட்டிற்கு செல்லும் ஜேமி, மற்றும் அங்கு வீட்டுவேலைகளைச் செய்ய வரும் ஒரேலியா. வயதாவதால் கிறிஸ்மஸ் சீசனில் ஒரு கடைசி ஹிட் பாடல் ஒன்றைக் கொடுக்க முயற்சிக்கும் பில் மற்றும் அவனின் மனேஜர் ஜோ. மனநிலை பாதிக்கப்பட்ட தம்பியால் தன் காதலிக்கும் கார்லுடன் நேரம் ஒதுக்கமுடியாமல் தடுமாறும் சாரா.

thumb6படமொன்றில் நிர்வாண செக்ஸ் காட்சிகளுக்காக டூப்பாக வரும் ஜோன் மற்றும் ஜுடிக்கிடையில் வளரும் காதல். தன் பிரிட்டிஷ் அக்சென்ட் மூலமாக பெண்களைக் கவர்ந்து லவ் பண்ணலாம் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா பயணமாகும் கொலின், தன் ஆபிஸில் வேலை செய்யும் மியா என்ற செக்ரட்டரியுடன் தன் மனைவி கரெனுக்கு தெரியாமல் ஒரு கனெக்சன் உருவாக்க முயற்சிக்கும் ஹாரி மற்றும் வீட்டுவேலைகளைக் கவனிக்க நியமிக்கப்படும் பணிப்பெண்ணான நாடலியுடன் உண்டாகும் காதலால் அமெரிக்க ஜனாதிபதியுடன் பிரச்சினையை இழுத்துக் கொள்ளத் துணியும் பிரிட்டனின் புதிய பிரதமரான டேவிட். (எல்லாரையும் கவர் பண்ணிட்டேனா) … ஆ … மற்றும் இடையில் கெஸ்ட் என்ட்ரி கொடுக்கும் ரோவன் அட்கின்ஸன் (Mr. Bean) மற்றும் சில நான் அறியா பிரபல நட்சத்திரங்கள்.

இம்புட்டு தாங்க கதை. ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்கள் போல இருக்கும் கதாபாத்திரங்களும் கதையும், நேரம் செல்லச் செல்ல ஒவ்வொருவரின் கதையிலும் இன்னொருவரை சம்பந்தப்படுத்தி, இறுதியில் ஒரு வலை போல பின்னிவிடுவது க்யுட்.



thumb5ஆனா என்னதான் நடித்துக் கொடுத்துவிட்டாலும், இவ்வளவு பெரிய ஸ்டோரியை நாம எம்புட்டு நேரம் தான் பாக்குறது? அதனால இவ்ளோத்தையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அடக்க வேண்டிய பொறுப்பு விழுவது இயக்குனர் மற்றும் எடிட்டர் கையிலும் தான். ஆனால் இந்த விசயத்தில் நம்ம இயக்குனர் ரிசர்ட் கர்டிஸ் கில்லாடி. ரொம்பவும் போரடிக்காமல், பார்த்தது போன்ற காட்சிகளே திரும்ப வராமல் அவ்வளவு கதைகளையும் அழகாக வெறும் 130 நிமிடங்களுக்குள் செதுக்கியதற்கே இருவருக்கும் தனியாக ஒரு பாராட்டு கொடுக்கவேண்டும்.

படம் பார்க்கும்போது எனக்குத் தோன்றிய ஒரே பிரச்சினையும் மேலே சொன்னது தான். உண்மையில் இவ்வளவு கதைகளை இதற்குள் அடக்கவேண்டுமா? ஒரு மூன்று நான்கு கதைகளை தூக்கியிருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது அடியேனின் கருத்து. சில கதைகள் ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்து திடீரென காணாமல் போய் இறுதியில் திடீர் என்ட்ரி கொடுப்பது எல்லாம் தேவையில்லாத வேலை. Too many cooks spoil the soup!

ரொமாண்டிக் காமெடி வகையில் நான் பார்த்த ஓரளவு பர்ஃபெக்டான படம் என்றால் இதை கூறலாம். காரணம் என்ன தான் சின்னக் கிளைக் கதைகள் அதிகம், படம் நீளம் என்று குறைப்பட்டாலும் எல்லா நல்ல ரொமாண்டிக் படங்களும் காட்ட முயற்சிக்கும் அந்த ஃபீல் குட் உணர்வு இந்தப் படத்தில் வருவது நிச்சயம். 

thumb1நடிப்பு சூப்பர், பிரமாதம் என்று யார் பக்கமும் விரலை நீட்டிக் காட்டமுடியாது. எல்லாரும் பிரபல நட்சத்திரங்கள் (எனக்குத் தெரிந்த முகங்கள் Liam Neeson, Rown Atkinson, Colin Forth மற்றும் Chiwetel Ejiofor) ஆனால் இளம் பிரதமராக வரும் Hugh Grant இன் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் நாடலியிடம் வாலாட்ட முயற்சிக்கும் அமெரிக்கன் ஜனாதிபதியிடம் ப்ரஸ் மீட்டிங்கில் மறைமுகமாக சண்டையிழுக்கச் செல்லும் இடம் எல்லாம் நல்லாயிருந்தது. படம் முழுவதும் இது போன்ற அழகான சுவாரஸ்யமான இடங்கள் இருப்பதால் படம் பார்ப்பவர்களுக்கு ஏதாவது ஒரு இடம் அல்லது வசனம் கட்டாயம் பிடித்திருக்கும்.



மாயன்காரனுங்க இன்னும் உலகம் அழிய இன்னுமொரு அஞ்சாறு மாசம் தான் டைம் கொடுத்திருக்கானுங்க. அதுக்குள்ள இந்தப் படத்தைப் பார்த்து காதல் செய்யத் தொடங்குங்க. மனசுக்குப் புடிச்சவங்க கூட நேரம் ஒதுக்கி செலவளிங்க.


Life is good when Love is actually all around !!!



மார்க்கு – 87/100





படத்திற்கான ட்ரெயிலர்



யாருக்காச்சு தோணியிருக்குமே? இவ்வளவு நல்ல படம் ஏன் +18ன்னு போட்டிருக்குன்னு? அதாவது ஜோன் மற்றும் ஜுடியின் செக்ஸ் ஸ்டண்ஸினால் மட்டும் இந்த ரேடிங்.